ரேஷன்கடைகளில் தேவையின்றி வெளி ஆட்கள் இருந்தால் கைது எச்சரிக்கை பணியின் போது அடையாள அட்டை அவசியம் அணிய வேண்டும்.

ரேஷன்கடைகளில் தேவையின்றி வெளி ஆட்கள் இருந்தால் கைது எச்சரிக்கை பணியின் போது அடையாள அட்டை அவசியம் அணிய வேண்டும்.

ரேஷன்கடைகளில் தேவையின்றி வெளி ஆட்கள் இருந்தால் கைது எச்சரிக்கை பணியின் போது அடையாள அட்டை அவசியம் அணிய வேண்டும்

ரேஷன்கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களை தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது. அவ்வாறு வெளிநபர்கள் ரேஷன்கடைகளில் இருந்தால், இதுகுறித்து காவல் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் வெளிநபர்கள் கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணைபோகும் ரேஷன்கடை விற்பனையாளர்கள் மீதும் மேற்குறிப்பிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஏற்கெனவே மாநில கூட்டுறவு துறை தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதை உடனடியாக திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் முதல்வரின் முகவரியில் தொடர்ச்சியாக புகாரளித்திருந்தார்.

இந்த நிலையில் இது தொட‌ர்பாக திருப்பூர் மாவட்ட கூட்டுறவு துறை துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்). எம்.தேவி அவர்கள் ஈ.பி.அ.சரவணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்.....

மேற்படி மனுக்கள் தொடர்பாக பின்வருமாறு விவரம் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வெளி நபர்கள் அனுமதிக்கக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.