கனிமவளத்துறை அமைச்சர் S.ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பு!!!

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஏழு வழித்தடங்களில் புதிய பேருந்துகளை துவக்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி கூட்டணி கட்சிகளை அன்போடு அரவணைக்கும் கட்சி திராவிட முன்னேற்ற கழகம் எனவும் கூட்டணி கட்சிக்குள் கொள்கை வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம் எனவும் இது கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்தார்

தங்களுடைய இயக்கத்தில் 2 கோடி பேர் இணைந்து இருப்பதாகவும் எங்களுடைய தலைவருக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் வழிநடத்துவார் என தெரிவித்தார்தற்பொழுது நடந்து முடிந்த இளைஞர்களுக்கான மாநாட்டில் கின்னஸ் சாதனை செய்யும் மாநாடாக அமைந்திருப்பதாகவும் ஒவ்வொரு முனையும் இளைஞர் அணி மாநாடு சாதனை செய்யும் அளவில் நடைபெற்றதாகவும் ஒரு கோடி பேர் இளைஞர் அணிகள் மட்டும் கலந்து கொண்டதாகவும் காவிரி வைகை குண்டாறு விவகாரத்தில் திமுக அரசு மாயனூரில் தடுப்பணை கட்டியதாகவும் இதுவே காவேரி வைகை குண்டாறு திட்டத்தில் துவக்க நிகழ்வாக அமைந்தது எனவும் தெரிவித்தார் அமித் ஷா உள்ளிட்ட பிஜேபி இனர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வரவேண்டும் எனவும் தேர்தலில் டெபாசிட் இழப்பதை தவிர்க்க பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார் தமிழகத்திலிருந்து பெறக்கூடிய வரியை மற்ற மாநிலத்திற்கு செலவு செய்வதற்கு மட்டும்தான் பிஜேபி செயல்படுவதாகவும் பீகார் போன்ற ஒரு வெற்றியை தமிழகத்தில் பிஜேபி பெற வாய்ப்பே இல்லை எனவும் தமிழகம் என்றாலே திராவிட இயக்கத்தில் கோட்டை எனவும் இங்கு பாரதிய ஜனதா கட்சி ஆன்மீக அரசியலை கூறி எந்தவித வெற்றியின் பெற முடியாது எனவும் தெரிவித்தார் எங்களைப் பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தங்களுடைய கொள்கை எனவும் அதிமுக ஆட்சியில் மருத்துவ துறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகத்தில் மருத்துவத்துறை மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயிண்ட் அடிப்பதை மட்டும் தான் வேலையாக கொண்டவரிடம் தெரிவித்தார் தேர்தல் வருகிறது என்பதற்காக திமுக மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வருவதாக தெரிவித்தார்.

பத்திரிகையாளர் : வீ.வீரராகவன்; 9443401036